இறங்கி அடிக்கும் புது Honor போன்! 108MP OIS EIS கேமரா, 360 டிகிரி IP65M ரேட்டிங், 6600mAh பேட்டரி! என்ன விலை?
ஹானர் (Honor) நிறுவனம் கூடிய விரைவில் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அது ஹானர் எக்ஸ்9சி (Honor X9c) ஸ்மார்ட்போன் ஆகும் மற்றும் இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) வழியாக மட்டுமே வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
நினைவூட்டும் வண்ணம் இது கடந்த நவம்பர் 2024 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்பட்டது. இந்தியாவிற்கு வரும் வேரியண்ட் ஆனது க்ளோபல் வேரியண்ட்-ஐ போலவே 108 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமராவுடன் வரும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?
எப்போது அறிமுகமாகும் (Honor X9c Launch date in India)? ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹானர் நிறுவனம் ஒரு எக்ஸ் பதிவின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அமேசான் இந்தியா வழியாக மட்டுமே நாட்டில் வாங்க கிடைக்கும் என்பதை ஹானர் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Honor X9c Specifications Confirmed and Expected)? அமேசான் இந்தியாவில் உள்ள மைக்ரோசைட்டின் படி, இந்த போன் SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் இது க்ளோபல் வேரியண்ட்-ஐ போலவே தூசி மற்றும் 360 டிகிரி நீர் எதிர்ப்பிற்கான IP65M ரேட்டிங்-ஐ பெறுகிறது.
கூடவே ஹானரின் பவர் மேனேஜ்மென்ட் சிஸ்டத்துடன், ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் ஆனது தீவிரமான வெப்பநிலை நிலைகளிலும், நிலையான செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது. அளவீடுகளை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 7.98 மிமீ தடிமன் கொண்டதாகவும், எடையில் 189 கிராமும் இருக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் ஆனது 66W வயர்டு சூப்பர்சார்ஜ் ஆதரவுடன் 6,600mAh பேட்டரியை பேக் செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் எப்/1.7 அபெர்க்ஷர் மற்றும் 3எக்ஸ் வரை லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 108-மெகாபிக்சல்ப்ரைமரி ரியர் சென்சாரை கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகிய இரண்டையும் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட் போன் ஏஐ ஏரேசர் மற்றும் மோஷன் சென்சிங் போன்ற ஏஐ ஆதரவு கொண்ட எடிட்டிங் அம்சங்களையும் பெறும் என்று கூறப்படுகிறது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்திய வேரியண்ட் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 9.0 அப்டேட் (MagicOS 9.0) உடன் வரும் என்று ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும், இது 300 சதவீதம் அதிக சத்தமான ஒலியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5K கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4,000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ் மற்றும் 3,840Hz PWM டிம்மிங் ரேஷியோ ஆகியவைகளை கொண்டிருக்கும்.
ஹானர் எக்ஸ்9சி இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (Honor X9c Price in India Expected)? மலேசியாவில், ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போனின் பேசிக் 12GB ரேம் + 256GB ஆப்ஷன் மற்றும் 12GB ரேம் + 512GB ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி முறையே.. தோராயமாக ரூ.28,700 மற்றும் ரூ.32,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதேபோன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications