Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. ரூ.22000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. 35W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் இருக்கு, சாம்சங் சென்சார கேமரா இருக்கு, வாட்டர் ப்ரூஃப் பாடி இருக்கு, 5800mAh பேட்டரி இருக்கு, 35W சார்ஜிங் இருக்கு, இப்படி சொல்லிக்கிட்டே போகும்படியான பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் (HONOR X9c Smart) போனானாது, மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பிரீமியம் டிசைனில் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்களில் பின்னி எடுத்திருக்கிறது. இந்த ஹானர் போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

இந்தியாவில் ஹானர் மாடல்கள் வெளியாக தொடங்கிவிட்டன. பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் விலையில் பிரீமியம் பீச்சர்களுடன் மாடல்கள் கிடைக்கின்றன. இப்போது, அடுத்த பட்ஜெட் வேரியண்ட்டை அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், மலேசியாவில் கம்மி பட்ஜெட்டில் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் போன் வெளியாகிறது.

மிரட்டிவிட்டாப்ல.. ரூ.22000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5800mAh பேட்டரி!

ஆன்டி டிராப் டெக்னாலஜி (Anti-Drop Technology), வாட்டர் ப்ரூஃப் டிசைன் (Waterproof Design) மற்றும் ஃபுல்-பாடி ரின்ஸ் (Full Body Rinse) புரொடெக்சன் கொண்ட பாடியுடன் குவாலிட்டியாக கிடைக்கிறது. இந்த பாடியில் மூன்லைட் ஒயிட் (Moonlight White), ஓசன் சியான் (Ocean Cyan) கலர்களில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் அம்சங்கள் (HONOR X9c Smart Specifications): லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 6என்எம் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (6nm Octa Core MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் வருகிறது.

மாலி கிராபிக்ஸ் கார்டு இல்லை, பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜிபியு (GPU) ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 (IMG BXM 8 256) கிராபிக்ஸ் கார்டு இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் போனில் 8 ஜிபி கிடைக்கிறது. இந்த ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) இருக்கிறது. 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

டிஸ்பிளேவில் அமோலெட் மட்டும் இல்லை, ஆனால், 6.78 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளேவிலும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவில் பெற்று கொள்ளலாம். பட்ஜெட்டிலும் ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜிகள் கிடைக்கிறது.

இந்த டெக்னாலஜிகளுடன் 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா பேக் செய்துள்ளது. மெயின் கேமராவில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கிடைப்பதால், குவாலிட்டியாக போட்டோகிராபி அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த ஹானர் போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. 7.88 எம்எம் ஸ்லிம் பாடி இருக்கிறது.

இந்த ஸ்லிம் பாடியிலும் 5800mAh பேட்டரியை கொடுத்து மிரளவிட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 35W சூப்பர்சார்ஜ் (SuperCharge) சப்போர்ட் கிடைக்கிறது. 193 கிராம் எடையில் வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியை கொடுத்து இருக்கிறது.

இந்த ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,215ஆக இருக்கிறது. இந்த மலேசியாவில் இந்த போனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையாகும். அந்த நாட்டில் விற்பனை தொடங்கிவிட்டது. இதே பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இங்கு எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR X9c Smart With 108MP Camera 8GB RAM 5800mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X