திடீரென அறிமுகமான Honor 5ஜி போன்.. 108எம்பி கேமரா.. 5800mAh பேட்டரி.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஹானர் (Honor) நிறுவனம் தனது ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி (Honor X9c Smart 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 108எம்பி கேமரா, 5800mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஹானர் போனின் முழு விவரங்களைப் பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி அம்சங்கள் (Honor X9c Smart 5G Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே ( FHD display) உடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,224 x 2,700 பிக்சல்ஸ், 850 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

மேஜிக்ஒஎஸ் 8.0 (MagicOS 8.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 193 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என 3 வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் தனித்துவமான கேமிங் அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர ஏஐ அம்சங்கள், எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5800mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் வீடியோ கேம் மற்றும் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர டூயல் 5ஜி,ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஒடிஜி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
ஆனால் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி மலேசியாவில் (Malaysia) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனின் விலை குறித்த தகவலையும் வெளியிடவில்லை ஹானர் நிறுவனம். ஆனாலும் ரூ.19,000 பட்ஜெட்டில் இந்த போன் விற்பனைக்கு வரும் என ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








