Home
Mobile

பிப்ரவரி 15 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 108எம்பி கேமரா.. 6600mAh பேட்டரி.. வருகிறது Honor 5ஜி போன்..

ஹானர் (Honor) நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்9சி (Honor X9c) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது ஆன்லைனில் கசிந்த தகவலின்படி வரும் பிப்ரவரி 15-ம் தேதி இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதாவது டிப்ஸ்டர் பராஸ் குக்லானி இந்த போனின் அறிமுக தேதியைக் கூறியுள்ளார்.

ஆனால் ஹானர் நிறுவனம் இந்த புதிய போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஹானர் எக்ஸ்9சி போன் வெளிவரும். மேலும் ஏற்கனவே வெளியான இந்த ஹானர் எக்ஸ்9சி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிப்ரவரி 15 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Honor 5ஜி போன்..

ஹானர் எக்ஸ்9சி அம்சங்கள் (Honor X9c Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே உடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில்1,224 x 2,700பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) கொண்டுள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மேஜிக்ஒஎஸ் 8.0 (MagicOS 8.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர ஏஐ அம்சங்கள், எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான வசதிகள் கொண்டுள்ளது இந்த போன்.

பிப்ரவரி 15 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Honor 5ஜி போன்..

அதேபோல் IP65M தர டஸ்ட் மற்றும் 360 டிகிரி வாட்டர் ரெசிஸ்டன்ட் (dust and 360-degree water resistance)வசதியுடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக 6600mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் நீண்ட நேரம் வீடியோ கேம் மற்றும் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர டூயல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஒடிஜி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் இந்த போன் ரூ.29,990 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor X9c India launch date leaked online: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X