Home
Mobile

போட்டி போடுவாங்களே.. 6600mAh பேட்டரி கொண்ட 5ஜி போன் மீது ரூ.6990 விலை குறைப்பு.. எந்த மாடல்?

ஹானர் பிராண்ட் மீதான நம்பிக்கை இந்தியர்களுக்கும், இந்திய சந்தை மீதான நம்பிக்கை ஹானர் நிறுவனத்திற்கும் எப்போதும் நீடிக்கும் ஒரு விஷயமாகும். ஒப்பீட்டளவில் மற்ற சீன பிராண்டுகளை விட இது "உண்மையான பிளாக்ஷிப் அம்சங்களை" கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.

ஆனால் என்ன அதற்கு ஏற்ப விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும், மற்ற நிறுவனங்கள் ஏதாவது ஒரு செல்லிங் பாயிண்ட்டை வைத்துவிட்டு மீதி விஷயத்தில் "கைவைத்து விட்டு" விலையை குறைக்கும் பாணியை கையாளுகின்றன. ஆனால் ஹானர் அப்படி இல்லை. அதனாலேயே ஹானர் ஸ்மார்ட்போன்கள் மீதான விலை குறைப்புகள் கவனம் ஈர்க்கின்றன.

6600mAh பேட்டரி கொண்ட 5ஜி போன் மீது ரூ.6990 விலை குறைப்பு!

அப்படியாக ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் ஆப்ஷனின் அசல் எம்ஆர்பி ரூ.27,990 ஆகும். ஆனால் தற்போது இது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.6,990 விலை குறைப்பை பெற்றுள்ளது. சுவாரசியமாக இந்த சலுகை ஜேட் சியான் மற்றும் டைட்டானியம் பிளாக் ஆகிய 2 கலர்களிலும் கிடைக்கிறது.

ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840 ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் ரேஷியோ மற்றும் ஃப்ளிக்கர்-ப்ரீ மற்றும் லோ ப்ளூ லைட் TÜV ரைன்லேண்ட் சான்றிதழ் உடனான 6.78 இன்ச் 1.5கே கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 9.0 உடன் வருகிறது.

இந்த ஓஎஸ்-ன் கீழ் ஏஐ மோஷன் சென்சிங் (AI Motion Sensing), ஏஐ ஏரேஸ் (AI Erase), ஏஐ டீப்பேக் டிடெக்ஷன் (AI Deepfake Detection), ஏஐ மேஜிக் போர்டல் 2.0 (AI Magic Portal 2.0) மற்றும் ஏஐ மேஜிக் கேப்சூல் (AI Magic Capsule) போன்ற ஏஐ அம்சங்களும் அணுக கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 3xஎக்ஸ் வரை லாஸ்லெஸ் ஜூம் மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் உடனான 108 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் + 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளது இந்த கேமரா செட்டப்பில் உள்ள ப்ரைமரி கேமராவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு, ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6,600mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொண்டுள்ளது. இது 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, ஓடிஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ்ஜிஎஸ் டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழை கொண்டுள்ளது. மேலும் இது -30 டிகிரி சென்டிகிரேட் முதல் 55 டிகிரி சென்டிகிரேட் வரையிலான தீவிர வெப்பநிலையில் கூட பாதுகாப்பாக செயல்படும்,

மேலும் கூடுதல் பாதுகாப்பிற்காக ஸ்பெஷல் பேட்டரி கோட்டிங் மற்றும் பவர் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐபி65எம் ரேட்டிங் தூசி எதிர்ப்பு மற்றும் 360 டிகிரி நீர்-எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X9c 5G with 6600mAh Battery Price Drops in Amazon India Check Details Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X