SALE பொளக்க போகுது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 6600mAh பேட்டரி.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 108 எம்பி மெயின் கேமரா, 6600mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட மாடலாக ஹானர் எக்ஸ்9சி 5ஜி (HONOR X9C 5G) வெளியாக இருக்கிறது. இப்போது, இந்த போனின் முழு பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எப்போது வெளியாகும் என்ற தேதியும் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனின் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்த்துவிட்டு, வெளியீட்டு விவரங்களுக்கு செல்லலாம்.
ஹானர் எக்ஸ்9சி 5ஜி அம்சங்கள் (HONOR X9C 5G Specifications): இந்த போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் மற்றும் அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) கிடைக்க இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வர இருக்கின்றன. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 10X டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.
மேலும், 5 எம்பி வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மூவிங் போட்டோ, ஏஐ போட்டோகிராபி போன்ற மோட்கள் கிடைக்கின்றன. செல்பீ ஷூட்டரில் 1080p வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு மோட், கெஸ்ச்சர் கன்ட்ரோல் போன்ற பீச்சர்கள் வருகின்றன. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6600mAh லித்தியம் அயன் பேட்டரி கிடைக்கிறது.
IP65M ரேட்டிங் கொம்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) கிடைக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனில் 6.78 இன்ச் (2700 x 1224 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுவொரு 3840Hz PWM ஃபிரிகொன்சி கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும்.
ஏஐ எரைசர் (AI Eraser), டைனாமிக் இமேஜஸ் (Dynamic Images) போன்ற பீச்சர்களும் வருகிறது. 300 சதவீத சூப்பர் வால்யூம் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. இப்படி, ஒட்டுமொத்த பீச்சர்களையும் ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால், விலை விவரங்களை மட்டுமே உறுதி செய்யவில்லை.
இருப்பினும், இந்திய மார்கெட்டில் ரூ.25,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஆரம்ப விலை மாடலுக்கு கிடைக்கும் விலையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைப்பது உறுதியாகும். ஏனென்றால், அமேசான் பிரைம் டே சேலில் (Amazon Prime Day Sale) கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரையில் நடக்கும் சேலில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது ஜூலை 7ஆம் தேதி இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போன் வெளியாகும் என்றும் ஜூலை 12ஆம் தேதி முதலே விற்பனைக்கு கிடைக்கும் என்றும் ஹானர் இந்தியா நிறுவனம் தெரிவித்ததாக கெஜட்ஸ் 360 தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








