பிச்சிக்கிட்டு போகும்.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 66W சார்ஜிங்.. 6600mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் எச்எம்6 சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6600mAh பேட்டரி, 1.5K ரெசொலூஷனுடன் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, அட்ரினோ கிராபிக்ஸ் கார்டுடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு ஹானர் எக்ஸ்9சி 5ஜி (HONOR X9c 5G) போன் பேக் செய்துள்ளது. டைட்டானியம் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் எக்ஸ்9சி 5ஜி அம்சங்கள் (HONOR X9c 5G Specifications): இந்த ஹானர் மாடலில் அல்ட்ரா-டஃப் டிரிபிள் டிபென்ஸ் பாடி கிடைக்கிறது. ஆகவே, ஆல்-ஆங்கிள் அல்ட்ரா டஃப் குவாலிட்டி, வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் வருகிறது. 1.5K ரெசொலூஷனுடன் 6.78 இன்ச் (2700 x 1224 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D curved AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, P3 கலர் காமட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படியான அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 12ஜிபி ரேம் + 12ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் பேக் செய்துள்ளது. இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனில் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன.
கேமரா பிரியர்களை தூக்கி சாப்பிடும்படி பீச்சர்கள் இருக்கின்றன. சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் & எலக்ட்ரானிக் இமெஜ் ஸ்டெபிலைசேஷன் வருகிறது.

மேலும், அல்ட்ரா-கிளியர் ஆல் நைட் மோட் (Ultra-clear AI Night Mode), ஏஐ மோஷன் சென்சிங் கேப்ச்சர் (AI Motion Sensing Capture), ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் டைனாமிக் இமேஜஸ் (Dynamic Images) பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக 10x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 3x இன்-சென்சார் ஜூமிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனில் 6600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, பேக்கப் பட்டையை கிளப்பும்படி இருக்கும். IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது. ஜேட் சியான் (Jade Cyan), டைட்டானியம் பர்பிள் (Titanium Purple) மற்றும் டைட்டானியம் பிளாக் (Titanium Black) கலர்களில் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,765ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,605ஆகவும் இருக்கிறது. ஆகவே, பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் மாடல்களைவிட கம்மியான பட்ஜெட்டில் கொடுக்கிறது. ப்போது, மலேசியாவில் வெளியாகி இருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி ப்ரீ-ஆர்டர் தொடங்குகிறது. இந்தியாவில் விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








