Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 6600mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 108 எம்பி கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6600mAh பேட்டரி, IP65M ரேட்டிங் கொண்ட 360 டிகிரி வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் ஹானர் எக்ஸ்9சி 5ஜி (HONOR X9C 5G) வெளியாக இருக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் பாடி, ஏஐ கேமரா பீச்சர்கள் என்று ஒட்டுமொத்தமாகவே பட்டையை கிளப்பும் இந்த போனின் பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரையில் நடக்க இருக்கும் அமேசான் பிரைம் டே சேலில் (Amazon Prime Day Sale) கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, டிசைன் போன்ற முக்கிய பீச்சர்கள் அனைத்தும் உறுதியாகி இருக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 6600mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, ஒரிரு நாட்கள் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட இருப்பது தெரிகிறது. இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனானாது, ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், விலை விவரங்களையும் யூகிக்க முடிகிறது. இப்போது, அமேசான் தளத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு விலை விவரங்களுக்கு செல்லலாம்.

ஹானர் எக்ஸ்9சி 5ஜி அம்சங்கள் (HONOR X9C 5G Specifications): இந்த ஹானர் போனில் 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இதுபோக 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டைனாமிக் டிம்மிங் கிடைக்கிறது.

மேஜிக் போர்டல் (Magic Portal), மேஜிக் கேப்சூல் (Magic Capsule) மற்றும் பேரலல் ஸ்பேஸ் (Parallel Space) போன்ற பீச்சர்களுடன் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கிடைக்கிறது. இதுபோக ஆல் நைட் மோட் (All Night Mode), ஏஐ மோஷன் சென்சிங் (AI Motion Sensing), ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் டைனாமிக் இமேஜஸ் (Dynamic Images) போன்ற கேமரா பீச்சர்களும் கிடைக்கின்றன.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) மற்றும் 3X லாஸ்லெஸ் ஜூமிங் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனில் 6600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

இந்த பெரிய பேட்டரி கிடைத்தும் வெறும் 7.89 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல 189 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த பேட்டரிக்கு ஏஐ சூப்பர்-பவர் சேவிங் மோட் சப்போர்ட் கிடைக்கிறது. பில்ட் குவாலிட்டி பக்காவாக கொடுக்கும்படி 2 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக IP65M ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

இந்த பீச்சர்கள் மட்டுமே அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கின்றன. பிளாக் மற்றும் சியான் கலர்களில் கிடைக்க இருக்கிறது. சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டானது, ரூ.28,765 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, இந்திய மார்கெட்டிலும் அதைவிட கம்மியான விலைக்கு வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இங்கு 8 ஜிபி ரேம் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
HONOR X9C 5G With 108MP Camera To Launch India Soon Amazon Sale Confirmed Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X