அமேசான் மிரளுது.. பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 108MP கேமரா.. 6600mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஹானர் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களும் அறக்க பறக்கும் விதமாக 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 108 எம்பி மெயின் கேமரா, 6600mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட ஹானர் எக்ஸ்9சி 5ஜி (HONOR X9c 5G) போனின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் நிறுவனத்தின் ஹானர் 90, ஹானர் 200, ஹானர் எக்ஸ்9பி, ஹானர் மேஜிக் 6 ப்ரோ போன்ற போன்கள் இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றன. இதில் ஹானர் 90, ஹானர் 200 போன்ற போன்கள் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களை கொடுத்து, கஸ்டமர்களை தட்டித்தூக்கியது. இப்போது அடுத்த போனின் வெளியீடு அமேசான் தளத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஹானர் நிறுவனத்தின் எக்ஸ்9சி போன் இந்திய மார்கெட்டில் அடுத்த சில வாரங்களில் வெளியாவதை இது உறுதி செய்துள்ளது. இதனால், ஹானர் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களும் அறக்க பறக்கும்படி எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஏனென்றால், இந்த ஹானர் எக்ஸ்9சி போன் ஏற்கனவே மலேசிய மார்கெட்டில் வெளியாகிவிட்டது.
இதன் பீச்சர்கள் மற்றும் விலை பட்ஜெட்டைவிட கூடுதாக கிடைக்கின்றன. இதே பீச்சர்கள் மற்றும் விலையில் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பதால், இப்போதே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. ஆகவே, மலேசிய மார்கெட்டில் இந்த ஹானர் எக்ஸ்9சி போனுக்கு கொடுக்கப்பட்ட பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்ப்போம். அதன்பிறகு ஏன் எதிர்பார்ப்பு என்பது தெரியும்.
ஹானர் எக்ஸ்9சி 5ஜி அம்சங்கள் (HONOR X9c 5G Specifications): இந்த ஹானர் போனில் 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமெஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது.
இந்த டெக்னாலஜிகள் போக 10x டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். மேலும், 3X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த ஹானரில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இதுபோக 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிசைனில் 6.78 இன்ச் (2700 x 1224 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. எச்டிஆர்10 (HDR10) வருவதால், ஓடிடி அவுட்புட் பிரீமியமாக கிடைக்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேக் செய்துள்ளது.
ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4nm (Octa Core Snapdragon 6 Gen 1) சிப்செட் கிடைக்கிறது. 6600mAh பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,765ஆக இருக்கிறது. ஆகவே, இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இதனால், ஹானர் பிரியர்கள் காத்திருந்து வாங்கலாம்.


Click it and Unblock the Notifications