Home
Mobile

மொத்த இந்தியாவும் இந்த Honor போனுக்கு வெயிட்டிங்.. 6600mAh பேட்டரி.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய ஹானர் எக்ஸ்9சி 5ஜி (HONOR X9C 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஹானர் போன் ஆனது வரும் ஜூலை 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்9சி 5ஜி அம்சங்கள் (Honor X9c 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு எட்ஜ் அமோலெட் (curved-edge AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (3,840Hz PWM dimming) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மொத்த இந்தியாவும் இந்த Honor போனுக்கு வெயிட்டிங்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) சிப்செட் உடன் ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் IP65M தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

ஹானர் எக்ஸ்9சி 5ஜி பின்புறம் OIS ஆதரவு கொண்ட 108எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் 10X டிஜிட்டல் ஜூம், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் மேம்பட்ட AI அம்சங்கள் இந்த ஹானர் எக்ஸ்9சி 5ஜி போனில் உள்ளன. குறிப்பாக மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் ஹானர் எக்ஸ்9சி 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6600mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

டைட்டானியம் பிளாக் மற்றும் ஜேட் சியான் நிறங்களில் ஹானர் எக்ஸ்9சி 5ஜி போன் அறிமுகமாகும். ஹானர் எக்ஸ்9சி 5ஜி போன் ஆனது ஜூலை 12-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X9c 5G India launch date announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X