Home
Mobile

ரூ.20,000 பட்ஜெட்டில் தரமான 5G போன்! 360 டிகிரி வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 6600mAh பேட்டரி, 108MP OIS EIS கேம்!

360 டிகிரி வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 6600mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட், 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உட்பட பல முக்கிய அம்சங்களுடன் ஹானர் நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னன்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை?

என்ன மாடல்? ஹானர் நிறுவனம் அதன் ஹானர் எக்ஸ்9சி 5ஜி (Honor X9c 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் 2024 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலும் வெளியிடப்பட்டது; தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது.

ரூ.20,000 பட்ஜெட்டில் தரமான 5G போன்!

என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3,840ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் ரேஷியோ மற்றும் ஃப்ளிக்கர்-ப்ரீ மற்றும் லோ ப்ளூ லைட் TÜV ரைன்லேண்ட் சான்றிதழ் உடனான 6.78-இன்ச் 1.5கே (1,224x2,700 பிக்சல்ஸ்) கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான MagicOS 9.0 உடன் வருகிறது. இதன்கீழ் AI Motion Sensing, AI Erase, AI Deepfake Detection, AI Magic Portal 2.0 மற்றும் AI Magic Capsule போன்ற ஏஐ அம்சங்கள் அணுக கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 3x வரைஇயலா லாஸ்லெஸ் ஜூம் மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் உடனான 108 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் + 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளது

இந்த கேமரா செட்டப்பில் உள்ள ப்ரைமரி கேமராவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு, ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

ரூ.20,000 பட்ஜெட்டில் தரமான 5G போன்!

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6,600mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொண்டுள்ளது. இது 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5G, 4G, Wi-Fi, GPS, NFC, OTG மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழை கொண்டுள்ளது.

மேலும் இது -30 டிகிரி சென்டிகிரேட் முதல் 55 டிகிரி சென்டிகிரேட் வரையிலான தீவிர வெப்பநிலையில் கூட பாதுகாப்பாக செயல்படும் என்றும், கூடுதல் பாதுகாப்பிற்காக ஸ்பெஷல் பேட்டரி கோட்டிங் மற்றும் பவர் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐபி65எம் ரேட்டிங் தூசி எதிர்ப்பு மற்றும் 360 டிகிரி நீர்-எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் ஆகும்!

என்ன விலை? இந்தியாவில் ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜேட் சியான் மற்றும் டைட்டானியம் பிளாக் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும்

எப்போது முதல் விற்பனை? ஹானர் எக்ஸ்9சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 12 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை எஸ்பிஐ (SBI) அல்லது ஐசிஐசிஐ (ICICI) வபேங்க் கார்டுளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.750 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Honor X9c 5G 360 degree water resistance 6600mAh battery launched India Sale From July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X