Home
Mobile

பிப்ரவரி 15 காலி.. 3D கர்ட்வ் டிஸ்பிளே.. 360 டிராப் ரெசிஸ்டன்ஸ்.. 1920Hz டிம்மிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஹானர் 90 (Honor 90) போனுக்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பை தொடர்ந்து, ஹானர் நிறுவனம் அதன் மற்றொரு மிட்-ரேஞ்ச் வேரியண்ட்டான ஹானர் எக்ஸ்9பி (Honor X9b) போனை களமிறக்குகிறது. இந்த போனின் டிஸ்பிளே டெக்னாலஜிகள் பக்கா பிரீமியமாக இருக்கிறது.

இந்த ஹானர் எக்ஸ்9பி போன் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், டிஸ்பிளே விவரங்கள் மட்டும் வெளியாகி மார்கெட்டை மிரள வைத்துள்ளது.

3D கர்ட்வ் டிஸ்பிளே.. 360 டிராப் ரெசிஸ்டன்ஸ்.. 1920Hz டிம்மிங் போன்!

இந்த ஹானர் வேரியண்ட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 360 டிகிரி டிராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance) கொண்ட அல்ட்ரா பவுன்ஸ் ஆன்டி-டிராப் டிஸ்பிளே (Ultra-Bounce Anti-Drop Display) மாடலாகும். இதன் மூலம் இந்த போனின் 6 பக்கங்கள், 4 கார்னர்களிலும் டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

ஆகவே, அதிகபட்சம் 1.5 மீட்டர்கள் வரையில் தண்ணீரில் மூழ்கினாலும், ரெசிஸ்டன்ஸ் பக்காவாக இருக்கும். அதேபோல மைக்ரோலெவல் கேப்களிலும் (Micron-level Gaps) குஷனிங் மெட்டீரியல் (Cushioning Material) பயன்படுத்தப்பட்டிருப்பதால், ஏர்பேக் கூட போனுக்குள் நுழைய முடியாது. மொத்தமாக IP53 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

3D கர்ட்வ் டிஸ்பிளே.. 360 டிராப் ரெசிஸ்டன்ஸ்.. 1920Hz டிம்மிங் போன்!

இந்த ஹானர் எக்ஸ்9பி போனில் ஐ கம்போர்ட்டுக்காக (Eye Comfort) பக்காவான 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டைனாமிக் டிம்மிங் (Dynamic Dimming) டெக்னாஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேச்சுரல் லைட் கன்டிஷன்களுக்கு (Natural Light Conditions) ஏற்றவாறு டிஸ்பிளே டிம்மிங் இருக்கும்.

இதுமட்டுமல்லாமல், சர்க்காடியன் நைட் டிஸ்பிளே (Circadian Night Display) டெக்னாஜி வருகிறது. இதன்மூலம் நைட்டைம்மின் போது, டிஸ்பிளே ஹார்ம்புல் லைட்டிங்கை (Harmful Lighting) கன்ட்ரோல் செய்கிறது. ஆகவே, கண்களுக்கு எந்தவித கோளாறும் ஏற்படாதவாறு, இந்த ஹானர் எக்ஸ்9பி போனின் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவொரு 6.78 இன்ச் அல்ட்ரா கிளியர் டிஸ்பிளே (Ultra-Clear Display) மாடலாகும். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன், 1.7 பில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. அதோடு 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. இந்த போன் ஏற்கனவே சீனாவில் வெளியாகிவிட்டது. அதன் அம்சங்கள், இந்திய வேரியண்ட்டில் வர வாய்ப்புள்ளது. ஆகவே, அவற்றை பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b Specifications): இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டுள்ளது. 35W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது.

3D கர்ட்வ் டிஸ்பிளே.. 360 டிராப் ரெசிஸ்டன்ஸ்.. 1920Hz டிம்மிங் போன்!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Octa-core Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் வருகிறது. அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் வருகிறது. மிட்நைட் பிளாக் (Midnight Black), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.

இந்த ஹானர் எக்ஸ்9பி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,792ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே விலையில் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆகவே, பட்ஜெட் விலையில் பக்கா பிரீமியமாக இந்த போன் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR X9b With Anti-Drop Display Launch in India on February 15 Sale on Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X