நாளைக்கு இருக்கு.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 16MP செல்பீ.. 16GB ரேம்.. 5800mAh பேட்டரி.. எந்த போன்?
ஹானர் 90 போனுக்கான மிகப்பெரும் வரவேற்பு பிறகு மீண்டும பட்ஜெட்டில் பக்கா அம்சங்களுடன் ஹானர் எக்ஸ்9பி (Honor X9b) போனை ஹானர் நிறுவனம் களமிறக்குகிறது. இப்போது, அந்த போனின் செல்பீ மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஹானர் நிறுவனமானது, பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பரில் ஹானர் 90 போனை இந்திய மார்கெட்டில் களமிறக்கியது. பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்களை கொடுத்து ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இப்போது, அதே வியாபார யுக்தியில் ஹானர் எக்ஸ்9பி போனை பிப்ரவரி 15ஆம் தேதி களமிறக்குகிறது.

இந்த வெளியீடு காரணமாக அந்த போனின் அம்சங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. லேட்டஸ்ட் அம்சங்களாக செல்பீ கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷனின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இந்த அம்சங்களோடு அந்த போனின் விலை, விற்பனை உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது பார்ப்போம்.
ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b Specifications): இந்த போனில் 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அல்ட்ரா கிளியர் டிஸ்பிளே (Ultra-Clear Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
அதோடு 360 டிகிரி டிராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance) கொண்டிருக்கிறது. இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-screen Fingerprint Sensor) வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 GB மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Octa-core Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் வருகிறது. 5800mAh பேட்டரி கொண்டுள்ளது. சன்ஷைன் ஆரஞ்ச் (Sunshine Orange) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
108 எம்பி மெயின் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக் ஓஎஸ் 7.2 (Magic OS 7.2) கொண்டிருக்கிறது. 12 மாதங்களுக்கான ஸ்கிரீன் & பேக் கவர் பாதுகாப்பு வழக்கப்படுகிறது. அதோடு 24 மாதங்களுக்கான பேட்டரி ஹெல்த் வாரண்டி கொடுக்கப்படுகிறது.
அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. நாளை அறிமுகம் செய்யப்படும்போது, ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5ஈ (HONOR CHOICE Earbuds X5e) மாடலானது, இலவசமாக வழங்கப்பட இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆஃபர் ப்ரீ-புக்கிங் கஸ்டமர்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த விவரங்கள் மற்றும் அம்சங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. இந்த போனின் விலை ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த போனின் சீன வேரியண்ட்டின் விலை அந்த பட்ஜெட்டிலேயே இருக்கிறது. ஆகவே, அந்த வேரியண்ட்டின் அம்சங்களை தெரிந்து கொள்வோம்.
இந்த போனில் 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








