முழுசா வேற மாதிரி.. 16ஜிபி ரேம்.. 108எம்பி கேமரா.. வருகிறது புது ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 90 போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஹானர் 90 போன் ஆனது சற்று உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஹானர் நிறுவனம் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது ஹானர் எக்ஸ்9பி (HONOR X9B) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். தற்போது இந்த போனின் டீசர் மலேசியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த போன் முதலில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு மேஜிக் ஒஎஸ் 7.1 ( Magic OS 7.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புது ஹானர் போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்9பி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஹானர் போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5800 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக Hi-Res ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர 5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








