அரளுது மார்கெட்.. கம்மி பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.27,000 பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 5800mAh பேட்டரி, ஜென் 1 சிப்செட் போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் ஹானர் எக்ஸ்9 பி (Honor X9b) போன் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹானர் எக்ஸ்9 பி அம்சங்கள் (Honor X9b Specifications): இந்த போன் டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி போன்ற அனைத்து அம்சங்களிலும் பின்னியெடுக்கிறது. இந்த ஹானர் மாடலானது, 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் எட்ஜ் (Curved Edge) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 429 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி (Pixel Density), டிசிஐ பி-3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் 1920Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் சப்போர்ட் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Octa-core Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் வருகிறது. அதோடு மேஜிக் ஓஎஸ் 7.2 (Magic OS 7.2) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த ஹானர் போனில் 12 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 20 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனில் பிரம்மாண்ட டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா கொண்டிருக்கிறது.

அதோடு 5 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் 8X ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் இருக்கிறது. மேலும், போர்ட்ராய்டு (Portrait), கேப்சர் ஸ்மைல் (Capture Smile), டைம்-லேப்ஸ் போட்டோகிராபி (Time-lapse Photography) போன்ற பல்வேறு மோட்கள் வருகின்றன.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதில் 1080P ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இந்த போனில் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து 185 கிராம் எடைக் கொண்டுள்ளது.
இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ஓடிஜி (OTG), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல டைப்-சி ஆடியோ ஜாக் மற்றும் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போன் மிட்நைட் பிளாக் (Midnight Black), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,792ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதலில் சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன்பின் அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் நிறுவனம், பல ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மீண்டும் விற்பனையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








