108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. 12GB ரேம்.. அறிமுகமானது புது ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கி உள்ளது. சமீபத்தில் ஹானர் 90 எனும் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹானர் நிறுவனம். இந்த ஹானர் 90 போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம்.
அதாவது ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் எக்ஸ்9பி (HONOR X9B) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் தற்போது UAE இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே மிகவும் அருமையாக இருக்கிறது. அதேபோல் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும் இந்த போன்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி வெளிவந்துள்ளது. எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்9பி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஹானர் போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
எனவே இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் வெளிவந்துள்ளது. மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புது ஹானர் போன்.
இதுதவிர வேகன் லெதர் பேக் டிசைன் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். தற்போது இந்த போன் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஹானர் எக்ஸ்9பி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்படும் என ஹானர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலேசியா, UAE போன்ற சந்தைகளில் தான் இந்த போன் முதலில் விற்பனைக்கு வரும். அதன்பின்பு மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும்.


Click it and Unblock the Notifications








