வந்தா காலி.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
வந்தா மார்கெட் காலி என்று சொல்லும் அளவுக்கு பட்ஜெட் விலையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 108 எம்பி கேமரா, 5800mAh பேட்டரி போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் ஹானர் எக்ஸ்9பி (Honor X9b) போன், இந்தியாவில் களமிறங்க இருக்கிறது.
ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b Specifications): இந்த ஹானர் போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) விவிட் டிஸ்பிளே (Vivid Display) வருகிறது. இதுவொரு 3D கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும், 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, டிசிஐ பி-3 கலர் காமட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஹானரில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) வருகிறது.
ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 8X டிஜிட்டல் ஜூமிங், 3X லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. அதோடு 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 3 நாட்கள் பேக்கப் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது.
இந்த அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அதோடு அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் விற்பனைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9பி போனானது, வரும் பிப்ரவரி 8 அல்லது 9ஆம் தேதிகளில் விற்பனைக்கு வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த போனின் குளோபல் வேரியண்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதோடு சில நாடுகளில் விற்பனைக்கும் வந்துவிட்டது. ஆகவே, அந்த விவரங்களை இப்போது பார்ப்போம். இந்த போனின் மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்ட் மற்றும் செல்பீ கேமராவில் 1080P ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
5800mAh பேட்டரியோடு 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. 185 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த ஹானர் எக்ஸ்9பி போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Octa-core Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் வருகிறது.
அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக் ஓஎஸ் 7.2 (Magic OS 7.2) சப்போர்ட் கொண்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்கான பாக்காவான அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஹானர் போனில் 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.
இந்த ஹானரில் 5ஜி (5G), டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகின்றன.
இந்த ஹானர் போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய மூன்று கலர்கள் இருக்கின்றன. இந்த போன் வெளியான நாடுகளில், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,792ஆக இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








