Home
Mobile

கும்பிடு போட்டு வாங்கலாம்.. 108எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. மிரட்டலான ஹானர் போன்.. எந்த மாடல்?

ஹானர் எக்ஸ்9பி (HONOR X9B) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம். அதாவது இந்த போன் BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த அட்டகாசமான ஹானர் எக்ஸ்9பி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? பின்பு இந்தியாவில் எவ்வளவு விலையில் அறிமுகமாகும் என்பதைக் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கும்பிடு போட்டு வாங்கலாம்.. மிரட்டலான ஹானர் போன்.. எந்த மாடல்?

அதாவது ஹானர் 90 போன் ஆனது இந்தியாவில் ரூ.37,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட் உடன் TWS இயர்பட்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட்வசதியைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன் ஹானர் எக்ஸ்9பி (honor x9b) ஸ்மார்ட்போன். மேலும் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த டிஸ்பிளேவில் உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஹானர் எக்ஸ்9பி போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இதில் உள்ளது.

கும்பிடு போட்டு வாங்கலாம்.. மிரட்டலான ஹானர் போன்.. எந்த மாடல்?

5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளது ஹானர் எக்ஸ்9பி. மேலும் இந்த போனின் எடை 185 கிராம் ஆகும். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இணைய தளத்தில் வெளியான தகவலின்படி வரும் டிசம்பர் மாதம் இறுதியில் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த வருடம் ஹானர் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X9b to launch in India soon: What to expect? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X