சியோமி, மோட்டோ ஓரம்போ.. 108MP கேமரா, 256GB மெமரி.. பிப்.15-ல் இந்தியாவுக்கு வரும் ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் 90 என்ற ஸ்மார்ட்போனுக்கு பிறகு ஹானர் எக்ஸ்9பி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். அதன்படி வரும் பிப்ரவரி 15-ம் தேதி இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவு, தனித்துவமான வடிவமைப்பு, 108எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசானில் தான் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது
பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேஜிக் ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபேஸ் அன்லாக் (Face unlock) மற்றும் கைரேகை ஸ்கேனர் ( Fingerprint scanner) வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதேபோல் ஹானர் எக்ஸ்9பி ஆனது 5800 எம்ஏஎச் பேட்டரியைக் (5800mAh Battery கொண்டுள்ளது ஸ்மார்ட்போன்.குறிப்பாக இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (35W fast charging) வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் போன்.

ஹானர் எக்ஸ்9பி போன் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் . கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மிட்நைட் பிளாக் ( Midnight Black),எமரால்டு க்ரீன் (Emerald Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) நிறங்களில் இந்த ஹானர் போன் வெளிவரும். குறிப்பாக இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








