Home
Mobile

சியோமி, விவோ ஓரம்போ.. 108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் Honor போன்.. எந்த மாடல்?

கடந்த ஆண்டு ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது விரைவில் ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம்.

ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஹானர் இந்தியத் தலைவரான மாதவ் ஷெத் ஒரு டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அன்பாக்ஸ் செய்துள்ளார். அந்த புதிய போன் ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்ட ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் ஆகும்.

சியோமி, விவோ ஓரம்போ.. இந்தியாவுக்கு வரும் Honor போன்.. எந்த மாடல்?

குறிப்பாக ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன 108எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வரும என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b Specifications): 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்தியாவுக்கு ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே மிகவும் அருமையாக இருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி அறிமுகமாகும். எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்9பி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி, விவோ ஓரம்போ.. இந்தியாவுக்கு வரும் Honor போன்.. எந்த மாடல்?

5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வெளிவரும் இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் ஹானர் எக்ஸ்9பி போன் வெளிவரும். அதேபோல் ஹானர் எக்ஸ்9பி போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X9b Teaser Released in India: May Launch Soon: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X