இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹானர்.. 108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?
ஹானர் எக்ஸ்9பி (HONOR X9B) எனும் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது ஹானர் நிறுவனம். இந்நிலையில் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த போன் BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே விரைவில் ஹானர் எக்ஸ்9பி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த டிஸ்பிளேவில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அசத்தலான ஹானர் எக்ஸ்9பி குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட்வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஹானர் எக்ஸ்9பி போன் 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் 5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இதில் உள்ளது.
5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளது ஹானர் எக்ஸ்9பி. இந்த போனின் எடை 185 கிராம் ஆகும். அதேபோல் மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் ஹானர் எக்ஸ்9பி மாடல் ஆனது ரூ.25,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications