அதிர வைக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. 35W சார்ஜிங்.. 108MP கேமரா.. எந்த போன்?
இந்தியாவில் பிப்ரவரி 15-ம் தேதி ஹானர் எக்ஸ்9பி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு, 108எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
அதேபோல் முன்பு ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி இந்த ஹானர் எக்ஸ்9பி போன் ரூ.35,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனுடன் இலவச வயர்லெஸ் இயர்போன்களும் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனின் அதிகாரப்பூர்வ விலை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மற்ற நிறுவனங்களின் போன்களை விட இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b specifications): 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்தியாவுக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். இதன் டிஸ்பிளேவில் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஹானர் எக்ஸ்9பி போன் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மிட்நைட் பிளாக் ( Midnight Black),எமரால்டு க்ரீன் (Emerald Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) இந்த ஹானர் போன் வெளிவரும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பேஸ் அன்லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது.
ஹானர் எக்ஸ்9பி ஆனது 5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்த 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








