இன்பதிர்ச்சி கொடுத்த ஹானர்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வெளியானது அறிமுக தேதி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டது. குறிப்பாக ஹானர் 90 என்ற போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விரைவில் ஒரு அட்டகாசமான வடிவமைப்பு கொண்ட 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம்.
அதாவது ஹானர் எக்ஸ்9பி (HONOR X9B) எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். இந்நிலையில் இந்த புதிய ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதாவது பிப்ரவரி 8-ம் தேதி இந்த ஹானர் எக்ஸ்9பி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b specifications): ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் மேஜிக் ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ் அன்லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்9பி ஆனது 5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஸ்மார்ட்போன்.குறிப்பாக இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் போன்.
5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட்இ 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் இந்த ஹானர் போன் வெளிவரும். இந்தியாவில் ரூ.23,999 விலையில் இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








