Home
Mobile

மேல இருந்து தூக்கி போட்டாலும் உடையாது போல.. 108MP கேமரா.. 256GB மெமரி.. இந்தியாவுக்கு வரும் Honor போன்..

ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனின் டிராப் டெஸ்ட் டீசரை வெளியிட்டுள்ளது. HTech இன் தலைவரான மாதவ் ஷெத் தான் இந்த டீசரை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த போன் 8 அடி உயரத்தில் இருந்து டிராப் டெஸ்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த சோதனையில் ஹானர் எக்ஸ்9பி முற்றிலும் சேதமடையாமல் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

தூக்கி போட்டாலும் உடையாது போல.. இந்தியாவுக்கு வரும் Honor போன்..

ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (Honor X9b specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி அறிமுகமாகும். எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.

ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும். மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் எக்ஸ்9பி போன் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கி போட்டாலும் உடையாது போல.. இந்தியாவுக்கு வரும் Honor போன்..

5800 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போனை நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

ஹானர் எக்ஸ்9பி போன் ஆனது 5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. பிளாக், க்ரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

video courtesy: MadhavSheth, honor

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X9b Drop Test Teaser Released: India Launch Soon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X