ஆர்டர் குவியுமே! ரூ.22,000 பட்ஜெட்ல Anti-drop டிஸ்பிளே, 5800mAh பேட்டரி, IP53 ரேட்டிங், 108MP கேமரா, 8GB ரேம்!
35W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி, தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி53 ரேட்டிங், 108MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உட்பட மேலும் பல முக்கிய அம்சங்களுடன் ஒரு புதிய ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
இந்திய சந்தையில் பக்காவான கம்பேக் கொடுக்கும் நோக்கத்தின்கீழ் ஹானர் நிறுவனம் அதன் ஹானர் எக்ஸ்9பி 5ஜி (HONOR X9b 5G) ஸ்மார்ட்போனை இன்று (பிப்.15) அறிமுகம் செய்தது. ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்னென்ன விற்பனை சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: பெரும்பாலான இந்தியர்களுக்கு கேட்பதற்கே மிகவும் சில நம்பமுடியாத அம்சங்களை ஹானர் எக்ஸ்9பி 5ஜி கொண்டுள்ளது.இதன் டிஸ்பிளேவில் அல்ட்ரா-பவுன்ஸ் ஆன்டி-ட்ராப் 360-டிகிரி தொழில்நுட்பம் உள்ளது. இது ஏர்பேக் குஷனிங் மூலம் போன் கீழே விழும்போது அதை தாங்கும் வகையிலான வடிவமைப்பாகும்.
கூடவே இந்த ஹானர் ஸ்மார்ட்போன் ஷாக் -அப்சார்ப்ஸிங் கட்டமைப்பையும் கொண்டுள்ளது, இது சுமார் 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து காணார் எக்ஸ்9 பி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கீழே விழும்போதும் அதை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்கிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் உடன் 8ஜிபி LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரைக்கும் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனில் எப்/1.75 அபெர்க்ஷர் உடன் கூடிய 108எம்பி மெயின் கேமரா + எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 35W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. ஹானர் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் 3 நாட்கள் பேட்டரி லைஃப்பை வழங்கும். கடைசியாக இது தூசி மற்றும் நீர் தெளிப்புகளை எதிர்க்கும் ஐபி53 ரேடிங்கையும் கொண்டுள்ளது
ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.25,999 ஆகும். இருப்பினும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.22,999 க்கு கொண்டுவர முடியும்.
விற்பனையை பொறுத்தவரை இது மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு கலர் ஆப்ஷன்களில் பிப்ரவரி 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் (மதியம்) விற்பனைக்கு வரும் என்று ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அமேசான் இந்தியா மற்றும் நாடு முழுவதும் சுமார் 1,800 சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கும்!


Click it and Unblock the Notifications








