மார்க்கெட் அதிரும் மாஸ்டர் பீஸ்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. 35W சார்ஜிங்.. எந்த போன்?
ஹானர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஹானர் 90 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி (HONOR X9B 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் BIS சான்றிதழ் தளத்தில் ALI-NX1 எனும் மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபர் மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ஹானர் எக்ஸ்9பி 5ஜி அம்சங்கள்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்9பி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன் ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
மேஜிக் ஓஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13)இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ் அன்லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் போன்.
5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் இந்த ஹானர் போன்வெளிவரும். மேலும் ஆன்லைனல் வெளியான தகவலின்படி இந்த புதிய ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன் இந்தியாவில் ரூ.27,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








