Home
Mobile

பரபரப்பை கிளப்பும் HONOR.. சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேட்டரி.. 35W சார்ஜிங்.. 108MP கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் வரும் பிப்ரவரி 15-ம் தேதி ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஹானர் எக்ஸ்9பி போனின் பேட்டரி குறித்து ஒரு டீசரை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது 5800எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 19 மணி நேர வீடியோ பிளேபேக் மற்றும் 12 மணிநேர கேமிங்கை ஆதரிக்கிறது என ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரபரப்பை கிளப்பும் HONOR.. சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேட்டரி..

அதேபோல் ஹானர் எக்ஸ்9பி போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹானர் எக்ஸ்9பி போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்9பி 5ஜி அம்சங்கள் (Honor X9 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல். அதேபோல் மேஜிக் ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி போன்.

குறிப்பாக இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபேஸ் அன்லாக் (Face unlock) மற்றும் கைரேகை ஸ்கேனர் ( Fingerprint scanner) வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஹானர் எக்ஸ்9பி போன் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஹானர் எக்ஸ்9பி போன் 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் போன்.

பரபரப்பை கிளப்பும் HONOR.. சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேட்டரி..

ஹானர் எக்ஸ்9பி போனில் 5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மிட்நைட் பிளாக் ( Midnight Black),எமரால்டு க்ரீன் (Emerald Green) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) நிறங்களில் இந்த ஹானர் போன் வெளிவரும்.

குறிப்பாக இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த ஹானர் எக்ஸ்9பி போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வருவதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X9 5G battery and performance teaser released: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X