Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 108எம்பி கேமரா.. 7000mAh பேட்டரி.. புது Honor போன் ரெடி.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்8டி (Honor X8d) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் விரைவில் சீனா மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்8டி அம்சங்கள் (Honor X8d Specifications): 6.77-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080x2,392 பிக்சல்ஸ், 1.07 பல்லியன் கலர்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 2 சிப்செட் (Qualcomm's Snapdragon 6s Gen 2 chipset) உடன் ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

மேஜக்ஓஎஸ் 10 (MagicOS 10) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போனில் உள்ளன.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

புதிய ஹானர் எக்ஸ்8டி ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit: DNS, gadgets360, honor

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X8d specifications leaked: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X