மார்கெட் காலி.. வெறும் ரூ.17,666 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 512GB மெமரி.. எந்த மாடல்?
மார்கெட் அதிரும்படி வெறும் ரூ.17,666 பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 108 எம்பி கேமரா, 35W சூப்பர்சார்ஜ், 4500mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ஹானர் எக்ஸ்8பி (Honor X8b) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ஹானர் எக்ஸ்8பி அம்சங்கள் (Honor X8b Specifications): இந்த ஹானர் போனில் 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 3240Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 16.7 மில்லியன் கலர் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் சப்போர்ட் வருகிறது. பில்-ஷேப்ட் டிசைன் கொண்டுள்ளது. மேஜிக் கேப்சூல் (Magic Capsule) நோட்டிபிகேஷன் பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக் ஓஎஸ் 7.2 யுஐ (Magic OS 7.2 UI) வருகிறது.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Octa-core Qualcomm Snapdragon 680 SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்8பி போனில் 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன.
அதேபோல 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் போனில் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 8x டிஜிட்டல் ஜூமிங், 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. மேலும், போர்ட்ராய்டு (Portrait), நைட் (Night), சூப்பர் மேக்ரோ (Super Macro), டூயல்-வியூ (Dual-View) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதிலும் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 35W சூப்பர்சார்ஜ் (SuperCharge) சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி சி (USB-C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் போனில் (Side-facing Fingerprint Sensor) சென்சார் வருகிறது.
2D பேஸ் அன்லாக் (2D Face Unlock) சப்போர்ட் கொண்டுள்ளது. டைப்-சி இயர்ஜாக் (Earjack) வருகிறது. இந்த ஹானர் போனில் டூயல் 4ஜி எல்டிஇ (Dual 4G LTE) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஓடிஜி (OTG) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன.
இந்த போன் மிட்நைட் பிளாக் (Midnight Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் கிளாமரஸ் கிரீன் (Glamorous Green) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன் சவுதி அரோபியா மற்றும் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை வெறும் ரூ.17,666ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அடுத்த ஒரு சில மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம் போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்கள் கொண்டிருப்பதால், விற்பனையில் மிகப் பெரும் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








