மொத்த மார்கெட் வாங்கும் பட்ஜெட்.. 10000mAh பேட்டரி.. 1.5K OLED டிஸ்பிளே.. புது HONOR போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான மலிவான பட்ஜெட்டில் 10000mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் சிப்செட் கொண்ட மாடலாக ஹானர் எக்ஸ்80 (HONOR X80) அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, 10000mAh பேட்டரி கொண்ட மாடல்களை ஹானர் நிறுவனம் வைத்துள்ளது. இப்போது, புதிதாக இந்த ஹானர் எக்ஸ்80 மாடலை பட்ஜெட் விலையில் சேர்க்க இருக்கிறது.
ஹானர் நிறுவனத்தின் ஹானர் எக்ஸ்70 (HONOR X70) ஸ்மார்ட்போன் கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகியது. 8300mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருந்தால், மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, ஹானர் எக்ஸ்80 ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு அந்த நிறுவனம் ரெடியாகிவிட்டது. இதற்கு ஏற்ப பேட்டரி, டிஸ்பிளே மற்றும் சிப்செட் விவரங்கள் கசிந்துள்ளன.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக இந்த பீச்சர்கள் கசிந்துள்ளன. 6.81 இன்ச் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன் வருகிறது. மேலும், 10000mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் சிப்செட்டை கொடுக்க உள்ளது. 1000 யுவான் பட்ஜெட்டில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் விலை இருக்கும்.
ஆகவே, பட்ஜெட் விலையில் 10000mAh பேட்டரி கொண்ட மாடலாகவும் இந்த ஹானர் எக்ஸ்80 இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவிலும் ஹானர் நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த ஹானர் எக்ஸ்80 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இப்போது, ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்களை இப்போது பார்க்கலாம். இவை ஹானர் எக்ஸ்80 அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்கலாம்.
ஹானர் எக்ஸ்70 அம்சங்கள் (HONOR X70 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட்டை இந்த ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் மேஜிக்ஓஸ் 9.0 (MagicOS 9.0) உள்ளது. ஆகவே, எக்ஸ்80 மாடலில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கும்.
6.79 இன்ச் (2640 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8300mAh பேட்டரி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்துள்ளது. IP69K ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,000 பட்ஜெட்டில் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.24,000 பட்ஜெட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் ஹானர் எக்ஸ்80 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். சீன வெளியீட்டுக்கு பிறகு குளோபல் வெளியீடு இருக்கும். பிறகு இந்தியாவில் கிடைக்குமா என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications








