பிக் பேட்டரி போன்களின் புது ராஜா.. 10000mAh உடன் புது Honor போன்.. இம்முறையும் 7 மில்லியன் யூனிட் SALE!
கடந்த பிப்ரவரியில், ஹானர் எக்ஸ்80 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் ஒரு லீக் மூலம் வெளிவந்தன. இப்போது, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் என்கிற மிகவும் பிரபலமான டிப்ஸ்டர் வழியாக வெளிவந்த ஒரு புதிய லீக்கின் படி, ஒரு புதிய ஹானர் எக்ஸ்-சீரிஸ் போன் ஜூன் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
குறிப்பிட்ட டிப்ஸ்டர், அந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அது ஹானர் எக்ஸ்80 ஆக இருக்கலாம் என்று தெரிகிறது. கிடைக்கப்பெற்ற லீக்கின் படி, ஹானர் எக்ஸ்80 ஒரு பிளாட் ஆன வடிவமைப்புடன் கூடிய 6.8-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஒரு பெரிய 10,000mAh+ பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஹானர் ஏற்கனவே 10,000mAh+ பேட்டரிகளுடன் சில ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், இவ்வளவு பெரிய பேட்டரியை கொண்ட முதல் எக்ஸ்-சீரிஸ் மாடல் இதுவாக இருக்கும்.
ஹானர் எக்ஸ்80 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6-சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 ஆக இருக்கலாம். அதன் முந்தைய மாடலை போலவே, இந்த ஸ்மார்ட்போனும் கீழே விழும் போது ஏற்படும் அதிர்ச்சியை தாங்கும் உடலமைப்பை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஹானர் எக்ஸ்80 ஸ்மார்ட்போன் ஆனது மிஸ்டிக் பிளாக், மூன்லைட் ஒயிட், லைட்னிங் ரெட் மற்றும் வைப்ரண்ட் ஆரஞ்சு ஆகிய கலர் ஆப்ஷன்களில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு வெளியான ஹானர் எக்ஸ்70 கிட்டத்தட்ட 7 மில்லியன் யூனிட்கள் விற்பனையானதால், இந்த ஸ்மார்ட்போனும் சீன சந்தையில் வலுவாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்திய அறிமுகம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை.
ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.79-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்பட்டது மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,300mAh பேட்டரியை கொண்டிருந்தது. ஹானர் நிறுவனம் அதன் எக்ஸ்70 ஸ்மார்ட்போனின் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
11000mAh பேட்டரி கொண்ட புது ஹானர் போன்: கடந்த மாதம் வெளியான ஒரு லீக், ஹானர் நிறுவனம் 11000mAh பேட்டரி கொண்ட புது ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதாகவும், குறிப்பிட்ட ஸ்மார்ட்போனுக்கான சோதனை உற்பத்தி தொடங்கி விட்டதாகவும் கூறி இருண்டது. அந்த தகவலும் கூட இதே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாகவே கிடைத்து இருந்தது
அதன்படி, ஹானர் நிறுவனம் 10,690mAh மதிப்பிடப்பட்ட திறன் மற்றும் 11,000mAh வழக்கமான திறன் கொண்ட ஒரு புதிய பேட்டரியின் சோதனை உற்பத்தியை தொடங்கியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில், ஒரு பிரதான ஸ்மார்ட்போனில் இதுவரை பயன்படுத்தப்பட்டதிலேயே அதிக திறன் கொண்ட பேட்டரிகளில் இதுவும் ஒன்றாக அமையும். உருவாக்கத்தில் உள்ள இந்த ஹானர் ஸ்மார்ட்போனின் சரியான மாடல் பெயரை குறிப்பிட்ட டிப்ஸ்டர் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் ஹானர் பவர் 2 மாடலின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆக வர அதிக வாய்ப்புள்ளது; அதாவது இது பெரும்பாலும் ஹானர் பவர் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.
ஹானரை தவிர, ரியல்மி, ஒன்பிளஸ் மற்றும் விவோ போன்ற பிற ஆண்ட்ராய்டு பிராண்டுகளும் சமீபத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளன. ஒன்பிளஸின் சமீபத்திய அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் 6 மாடலில் 9,000mAh பேட்டரி உள்ளது. இதேபோல ரியல்மியின் லேட்டஸ்ட் மாடல்களில் ஒன்றான ரியல்மி சி100 4ஜி ஸ்மார்ட்போன் 8,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications