Home
Mobile

மொத்த சாம்ராஜ்யமே நடுங்குது.. 11000mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

மொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டிலும் இதுவரையில் வெளியான ஒட்டுமொத்த பெரிய பேட்டரி ஸ்மார்ட்போன்களையும் நடுங்க விடும்படி ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் (HONOR X80 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 11000mAh பேட்டரி கொண்ட முதல் மாடலாக மட்டுமல்லாமல், மற்ற பீச்சர்களிலும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

10000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. ஹானர் மற்றும் ரியல்மி நிறுனவங்களிடம் இந்த 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஆனால், 11000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இதுவரை வெளியாகவில்லை. இதை ஹானர் நிறுவனம் தட்டி தூக்கி இருக்கிறது. ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் மாடலை களமிறக்க இருக்கிறது.

மொத்த சாம்ராஜ்யமே நடுங்குது.. 11000mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்!

வருகிற ஜூன் 22ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாகவே பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கலர், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் உறுதியாகிவிட்டன. டிஸ்பிளே, சிப்செட் போன்ற பீச்சர்களும் மார்கெட்டில் தெரியவந்து, எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்து இருக்கிறது.

ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (HONOR X80 Pro Max Specifications): 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 11000mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. 6.8 இன்ச் (2788 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Qualcomm Snapdragon 6 Gen 5) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட இருக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும் பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

ஆகவே, இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இதுவொரு சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக அறிமுகமாக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. லைட்னிங் ரெட் (Lightning Red), பிளாக் ஆர்மர் (Black Armour) மற்றும் மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) கலர்களில் வர ருக்கிறது.

மேலும், வைட்டாலிட்டி ஆரஞ்ச் (Vitality Orange) கலரிலும் கிடைக்க இருக்கிறது. இதில் லைட்னிங் ரெட் கலர் வேரியண்ட்டில் வீகன் லெதர் பேனல் கிடைக்க இருக்கிறது. கோல்டன் மிடில் ஃபிரேம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜூன் 22ஆம் தேதி சீனாவில் வெளியாக பிறகு குளோபல் மார்கெட்டில் வெளியாவது குறித்த தகவல்கள் உறுதி செய்யப்பட இருக்கின்றன.

இந்தியாவில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி4 பவர் 5ஜி (realme P4 Power 5G) ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில் 10001mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு மேல் கேபாசிட்டி கொண்ட மாடல்கள் வெளியாகவில்லை. அதேபோல சீன மார்கெட்டில் ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் இப்போது, பெரிய பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HONOR X80 Pro Max With 11000mAh Battery to Launch on June 22 in China Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X