மிரண்டு போவீங்க.. 11000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. எந்த மாடல்?
இதுவரையில் வெளியான எந்த ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்காதபடி பெரிய 11000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் (HONOR X80 Pro Max) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
சீன மார்கெட்டில் முதலில் களமிறங்கும் இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. குளோபல் மார்கெட்டிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த கவனத்தையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் கிடைக்க இருக்கும் ரேம், ஸ்டோரேஜ் தெரியவந்துள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும், சீன டெலிகாம் தளம் வழியாக தெரியவந்துள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைப்பதால், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, 11000mAh பேட்டரி கொண்ட பட்ஜெட் விலை மாடலாகவும் இருக்கலாம். இது சீன விலை நிலவரமாக மட்டுமே இருக்கும். மற்ற மார்கெட்டுகளில் கூடுதலாக இருக்கலாம்.
லைட்னிங் ரெட் (Lightning Red), பிளாக் ஆர்மர் (Black Armour), மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) மற்றும் வைட்டாலிட்டி ஆரஞ்ச் (Vitality Orange) கலரில்களில் வெளியாக இருக்கிறது. இதில் லைட்னிங் ரெட் கலர் வேரியண்ட்டின் வீகன் லெதர் பேனல் கிடைக்கிறது. மற்ற மாடல்களில் வழக்கமான பேனல்கள் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (HONOR X80 Pro Max Specifications): 6.8 இன்ச் (2788 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 10000 நிட்ஸ் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 1.3 எம்எம் தின் பெசல்களுடன் டிஸ்பிளே வருகிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Octa Core Snapdrogon 6 Gen 5) சிப்செட்டை கொடுத்துள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 11000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. கேமராவில் பெரிதாக பீச்சர்களை எதிர்பார்க்க முடியவில்லை.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications