Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 11000mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படியான பேட்டரியுடன் ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் (Honor X80 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதுவரையில் வெளியான ஸ்மார்ட்போன்களில் பெரிய பேட்டரி மாடலாகவும் இது இருக்கப் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் 6000mAh பேட்டரி அல்லது 7000mAh பேட்டரி கொண்ட மாடல்களே பெரிய பேட்டரி மாடலாக பார்க்கப்பட்டன. ஆனால், இப்போது 9000mAh பேட்டரி, 10000mAh பேட்டரி மாடல்களே சர்வசாதாரணமாக கிடைக்க தொடங்கிவிட்டன. இதில் ஹானர் நிறுவனமானது, ஒருபடி மேலே போய் 11000mAh பேட்டரி கொண்ட மாடலாக களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 11000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

ஹானர் வின் சீரிஸ் மற்றும் ஹானர் எக்ஸ் சீரிஸ் மாடல்களில் பெரிய பேட்டரியை கொடுத்தது. முன்னதாக வெளியான ஹானர் வின் டர்போ (Honor WIN Turbo) ஸ்மார்ட்போனில் 10000mAh பேட்டரி கொடுக்கப்பட்டது. அதேபோல ஹானர் வின் (Honor WIN), ஹானர் வின் ஆர்டி (Honor WIN RT) ஆகிய ஸ்மார்ட்போன்களிலும் 10000mAh பேட்டரியை கொடுத்தது.

இப்போது, ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் (Honor X80 Pro Max) ஸ்மார்ட்போனில் 11000mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. இதுவரையில் வெளியான ஹானர் மாடல்களிலேயே அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாகவும், இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் இருக்கப்போவது தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் கசிந்துள்ளது.

ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Honor X80 Pro Max Specifications): 6.8 (2788 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்லிம் பெசல் மற்றும் ரவுண்டெட் கார்னர்களை கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

11000mAh பேட்டரியுடன் இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. மே மாதம் வெளியான குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Snapdragon 6 Gen 5) சிப்செட்டை இந்த போன் கொடுக்க இருக்கிறது. இந்த சிப்செட்டானது, போட்டோகிராபி மட்டுமல்லாமல், ஏஐ மற்றும் கேமிங் பீச்சர்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு உள்ளது.

சொல்லப்போனால், இந்த சிப்செட்டுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதேபோல 11000mAh பேட்டரி கொண்ட முதல் மாடலாகவும் இது இருக்கப் போகிறது. மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்க இருக்கிறது. 256 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது.

ஏஐ பீச்சர்களுடன் மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரியல் லைப் இமேஜ்கள் வெளியாகி இருக்கிறது. இதில் எக்ஸ் சீரிஸ் மாடல்களில் கிடைக்கும் ரவுண்டெட் டிசைன் கேமராவை பார்க்க முடிகிறது.

மேஜிக்ஓஸ், 11000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி உள்ளிட்ட பீச்சர்களையும் அந்த இமேஜ்களில் பார்க்க முடிகிறது. சீனாவின் 3சி சர்டிபிகேஷனுக்கும் இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. ஆகவே, ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். பிறகு குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Honor X80 Pro Max With 11000mAh Battery Snapdragon 6 Gen 5 Leaked Ahead Of China Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X