Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 11000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் (Honor X80 Pro Max) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் 11000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஐபி69கே ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Honor X80 Pro Max Specifications): 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) உடன் ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2788 x 1280 பிக்சல்ஸ், 10,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Qualcomm's Snapdragon 6 Gen 5) சிப்செட் உடன் ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
MagicOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16(Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட AI அம்சங்கள் உள்ளன.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் IP66, IP68, IP69, IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
11000mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த போன் 42 நாட்கள் வரை ஸ்டாண்ட்பை நேரத்தை (standby time) வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதுதவிர 26 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் நேரலையை ஒளிபரப்பி, கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.
ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். லைட்னிங் ரெட், வைப்ரண்ட் ஆரஞ்சு, மூன் ஷேடோ ஒயிட் மற்றும் மிஸ்டிக் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 1,999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.27,952) ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 2,199 Yuan (இந்திய மதிப்பில் ரூ.30,754) ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 2,499 Yuan (இந்திய மதிப்பில் ரூ.34,953) ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 2,799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.39,146) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications