Home
Mobile

கனவுல கூட நினைக்கல சாமி.. 11000mAh பேட்டரி.. 10000 நிட்ஸ் டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. புது HONOR ஸ்மார்ட்போன்!

இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கனவிலும் நினைக்காதபடி உலகின் முதலாவது 11000mAh பேட்டரி மாடலாக மட்டுமல்லாமல், முதல் 10000 நிட்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் (HONOR X80 Pro Max) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் கதிகலங்கி போய் இருக்கிறது.

ஹானர் நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் மாடல்களில் பெரிய பேட்டரி கிடைப்பது வழக்கமாகவே இருக்கிறது. ஆனால், இதுவரையில் வெளியான ஸ்மார்ட்போன்களிலேயே அதிக கேபாசிட்டியுடன் வெளியாக இருப்பதை மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எதிர்பார்த்து இருக்காது. 11000mAh பேட்டரி கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கனவுல கூட நினைக்கல சாமி.. 11000mAh பேட்டரி.. 10000 நிட்ஸ் டிஸ்பிளே!

சீன மார்கெட்டில் ஜூன் 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பேட்டரி மட்டும்தான் பெரிதாக இருக்கும், மற்ற பீச்சர்கள் வழக்கம்போல சொல்லி கொள்ளும்படி இருக்காது என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள் நினைத்த நேரத்தில் 10000 நிட்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இது இருக்கும் என்பதை ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சொல்லப்போனால், 11000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 10000 நிட்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடலும் இதுவரை வெளியாகவில்லை. ஆகவே, இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் முதலாவது மாடலாக இருக்கப் போகிறது. ஜூன் 22ஆம் தேதி வரையில் இடைவெளி இருப்பதால், இன்னும் பல்வேறு பீச்சர்களை ஹானர் நிறுவனம் உறுதி செய்ய வாய்ப்புள்ளது.

இதனால், ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் எகிறி இருக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் 203 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளது. மேலும், 8.08 எம்எம் தடிமன் வருகிறது. பர்ஃபாமென்ஸ் பக்கமும் குறை வைக்கவில்லை. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Snapdragon 6 Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது.

வழக்கமாக பெரிய பேட்டரியுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் பிரீமியம் லெவலுக்கு வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்படாது. ஆனால், ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வரையில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

11000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதை உடனடியாக சார்ஜ் செய்து கொள்ளும்படி 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வருகிறது. ஆகவே, 5000mAh பேட்டரி கொண்ட மாடல்களுக்கு கூட இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வழியாக சார்ஜ் செய்து கொள்ளலாம். பெரிய பேட்டரியாக இருக்கிறது.

10000 நிட்ஸ் டிஸ்பிளே மட்டுல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கிறது. 6.8 இன்ச் (2788 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) பேனலுடன் இந்த ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 1.3 எம்எம் தின் பெசல்களுடன் இந்த டிஸ்பிளே இருக்கப் போகிறது.

3 மீட்டர்கள் வரையில் டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 50 எம்பி மெயின் கேமராவை கொடுக்கிறது. இந்த மெயின் கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆப்டிகல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் கிடைக்க இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. லைட்னிங் ரெட் (Lightning Red), பிளாக் ஆர்மர் (Black Armour), மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) மற்றும் வைட்டாலிட்டி ஆரஞ்ச் (Vitality Orange) கலரில்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HONOR X80 Pro Max With 10000 Nits Display 11000mAh Battery Launching in China on June 22
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X