Home
Mobile

உலகையே மிரள விட போகும் Honor.. 10000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹானர் (Honor) நிறுவனம் தனது புதிய ஹானர் 80எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய போன் 10000mAh பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது சீனாவின் CQC சான்றிதழ் தளத்தில் இந்த ஹானர் 80எக்ஸ் (Honor X80) ஸ்மார்ட்போன் 2025010915830460 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. அதுவும் இந்த போன் 10000mAh பேட்டரி உடன் வரும் என ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

உலகையே மிரள விட போகும் Honor..  வருகிறது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹானர் 80எக்ஸ் அம்சங்கள் (Honor X80 Specifications): 6.8-இன்ச் எல்டிபிஎஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ஹானர் 80எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200x2640 பிக்சல்ஸ், ( 120Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய ஹானர் 80எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஹானர் 80எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஹானர் 80எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது இந்த ஹானர் போன்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய ஹானர் 80எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன.

உலகையே மிரள விட போகும் Honor..  வருகிறது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

முன்பு கூறியது ஹானர் 80எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 10,000mAh பேட்டரி உடன் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: huaweicentral, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X80 certification confirms large 10000mAh battery: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X