Home
Mobile

ஹானர் அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8100எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி (Honor X7e Plus 5G) ஸ்மார்ட்போனை கத்தாரில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். அதுவும் 8100எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Honor X7e Plus 5G Specifications): 6.87-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1592 x 720 பிக்சவ்ஸ், 1020 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஹானர்  அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் (Snapdragon 4 Gen 4 chipset) உடன் ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

MagicOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

8100எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

ஹானர்  அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய ஹானர் எக்ஸ்7இ பிளஸ் 5ஜி போனில் உள்ளன.சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, 5ஜி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த புதிய போனின் ஆரம்ப விலை QAR 999 (இந்திய மதிப்பில் ரூ.26,392)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor X7e Plus 5G with 8100mAh battery launched in Qatar: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X