Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 108MP கேமரா.. 6500mAh பேட்டரி.. வருகிறது புதிய ஹானர் போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் எக்ஸ்7டி (Honor X7d) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் ஹானர் எக்ஸ்7டி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்7டி அம்சங்கள் (Honor X7d Specifications): 6.77-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் எக்ஸ்7டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 850 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது புதிய ஹானர் போன்..

மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ஹானர் எக்ஸ்7டி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் எடை 193 கிராம் ஆகும்.

ஸ்னாப்டிராகன் 685 எஸ்ஒசி (Snapdragon 685 SoC) சிப்செட் வசதியுடன் ஹானர் எக்ஸ்7டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ஹானர் போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

108எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் எக்ஸ்7டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது.

12ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஹானர் எக்ஸ்7டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

மேலும் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த அசத்தலான ஹானர் போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

6500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்7டி போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஹானர் எக்ஸ்7டி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹானர் புதிய போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X7d full specifications revealed : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X