Home
Mobile

சத்தமில்லாமல் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Honor.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்7டி 5ஜி (Honor X7d 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஹானர் எக்ஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்7டி 5ஜி அம்சங்கள் (Honor X7d 5G specifications): 6.77-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஹானர் எக்ஸ்7டி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1610 x 720 பிக்சல்ஸ், 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Honor.. எந்த மாடல்?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 பிராசஸர் (Qualcomm's Snapdragon 6s Gen 3 processor) உடன் ஹானர் எக்ஸ்7டி 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ஹானர் எக்ஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளது.

மேஜிக்ஒஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஹானர் எக்ஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய ஹானர் எக்ஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. மேலும் ஐபி65 மதிப்பீட்டையும் (IP65 rating for dust and water resistance) கொண்டுள்ளது இந்த புதிய போன்.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் ஹானர் எக்ஸ்7டி 5ஜி போனில் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் புதிய ஹானர் எக்ஸ்7டி 5ஜி போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 206 கிராம் ஆகும். வெல்வெட் பிளாக் மற்றும் டெசர்ட் கோல்ட் நிறங்களில் புதிய ஹானர் போனை வாங்க முடியும்.

ஆனால் ஹானர் எக்ஸ்7டி 5ஜி போன் ஆனது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ஹானர் எக்ஸ்7டி 5ஜி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை ஹானர் நிறுவனம். கூடிய விரைவில் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும் அப்போது அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Honor X7d 5G launched with 6500mAh battery: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X