வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 35W சார்ஜிங்.. 108எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்7சி (Honor X7c) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6000mAh பேட்டரி, 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஹானர் போன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் எக்ஸ்7சி போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்தி பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்7சி அம்சங்கள் (Honor X7c Specifications): 6.67-இன்ச் டிஎப்டி எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ஹானர் எக்ஸ்7சி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,610 பிக்கசல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவம் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (octa-core Snapdragon 4 Gen 2 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஹானர் போன்.
MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Andorid 14) இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்7சி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (fingerprint sensor), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்7சி போன். எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உடன் ஹானர் எக்ஸ்7சி போன் விற்பனைக்கு வரும். மேலும் ஐபி64 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டை (IP64 water and dust resistance rating) கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் போன். அதேபோல் இந்த போனின் எடை 196 கிராம் ஆகும்.

6000mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்7சி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
ஃபரஸ்ட் கிரீன் (Forest Green), மிட்நைட் பிளாக் (Midnight Black), மூன்லைட் வைட் (Moonlight White) நிறங்களில் இந்த புதிய போனை வாங்கலாம். அதேபோல் ப்ளூடூத் 5, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ஹானர் எக்ஸ்7சி போன் ஆனது தற்போது அஜர்பைஜானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை AZN 359 (இந்திய மதிப்பில் ரூ.17,000)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








