Home
Mobile

இதுக்குத்தான் மொத்தமா வெயிட்டிங்.. பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 50MP கேமரா.. 35W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஹானர் எக்ஸ்7சி 5ஜி (HONOR X7c 5G) வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 5200mAh பேட்டரி, 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், 5 ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் வெளியாகிவிட்டது. இப்போது, இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியாகும் என்பதை ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதோடு அமேசான் (Amazon) தளத்தில் முழு பீச்சர்களுடன் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இந்த பீச்சர்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

இதுக்குத்தான் மொத்தமா வெயிட்டிங்.. பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. மாடல்?

ஹானர் எக்ஸ்7சி 5ஜி அம்சங்கள் (HONOR X7c 5G Specifications): இந்த ஹானர் போனில் 6.77 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 5200mAh பேட்டரி மற்றும் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்க இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 எஸ்ஓசி (Snapdragon 4 Gen 2 SoC) வருகிறது. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. பிரீமியம் புரொடெக்சன் கொடுக்கும்படி 5 ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் ப்ரூப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

ஆகவே, பக்கா டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இதை எதிர்பார்க்கலாம். 300 சதவீத ஹை-வால்யூம் மோட் (High Volume Mode) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. 3X லாஸ்லெஸ் ஜூமிங் கொண்ட 50 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா கிடைக்கிறது. ஹானர் மேஜிக் கேப்சூல் (HONOR Magic Capsule) வருகிறது.

இதுக்குத்தான் மொத்தமா வெயிட்டிங்.. பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. மாடல்?

இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனில் பாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் மூன்லைட் ஒயிட் (Moonlight White) ஆகிய கலர்கள் வருகின்றன. இதில் கிரீன் கலர் வேரியண்ட்டின் வீகன் லெதர் பேனல் கிடைக்கிறது. இதுவரை பார்த்த பீச்சர்கள் அமேசான் தளத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவையாகும். இந்த பீச்சர்கள் அப்படியே குளோபல் வேரியண்ட்டை போலவே உள்ளது.

ஆகவே, இதன் மூலம் மீதம் இருக்கும் பீச்சர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த போனில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) கிடைக்கிறது. குளோபல் வேரியண்ட்டின் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமே வருகிறது. ஆகவே, இந்திய வேரியண்ட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனில் 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த பீச்சர்களுக்கு ஏற்பவே பட்ஜெட்டும் இருக்கும். ஆகவே, ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், டியூரபிலிட்டி மற்றும் பேட்டரியில் பட்ஜெட் பிரியர்கள் விரும்பும்படியான அவுட்புட்டை கொடுப்பதால், வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR X7c 5G With 8GB RAM 50MP Camera To Launch Soon in India Check Confirmed Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X