முழுசா 1 மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இந்த Honor 5ஜி போனுக்கு தள்ளுபடி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஹானர் எக்ஸ்7சி 5ஜி (HONOR X7c 5G) ஸ்மார்டபோனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த போன் IP64 ரேட்டிங், ஸ்னாப்டிராகன் சிப்செட், 35W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ஹானர் எக்ஸ்7சி 5ஜி (HONOR X7c 5G) ஸ்மார்டபோனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கவிட முடியும்.

ஹானர் எக்ஸ்7சி 5ஜி அம்சங்கள் (HONOR X7c 5G Specifications): 6.8 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2412 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் உடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது.
1080p வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு, நைட், எச்டிஆர் போட்டோ போன்ற ஸ்டெபிலைசேஷன் மோட் ( (Stabilization Mode) உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளது. எல்இடி பிளாஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
5200mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஹானர் சூப்பர் சார்ஜ் ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும்ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications