பின்றானே இவன்.. வெறும் ரூ.14,999 போதும். 5200mAh பேட்டரி.. 50MP கேமரா.. 35W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஹானர் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் எக்ஸ்7சி 5ஜி (HONOR X7c 5G) மாடல் வெளியாகி இருக்கிறது. நம்ப முடியாத பட்ஜெட்டில் 5200mAh பேட்டரி, 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஹானர் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி, ரெட்மி, போகோ, ஐடெல், இன்பினிக்ஸ் போன்ற பிராண்ட்களின் மாடல்களுக்கு நிகராக அடிமட்ட பட்ஜெட் விலை மட்டுமல்லாமல், அதைவிட பக்கா பீச்சர்களுடன் ஹானர் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இதில் ஹானர் எக்ஸ்9பி (HONOR X9b) மற்றும் ஹானர் எக்ஸ்9சி (HONOR X9c) மாடல்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற்றன.

இப்போது, ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் அந்த மாடல்களைவிட மலிவான விலைக்கு வெளியாகி ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இதில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதன் விலை ரூ.14,999ஆக இருக்கிறது.
இந்த விலையில் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் மூன்லைட் ஒயிட் (Moonlight White) ஆகிய 2 கலர்களில் வாங்கி கொள்ளலாம்.
ஹானர் எக்ஸ்7சி 5ஜி அம்சங்கள் (HONOR X7c 5G Specifications): இந்த ஹானர் போனில் 6.8 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கிடைக்கிறது. மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா (Dual Rear Camera) கிடைக்கிறது.
இந்த கேமராவில் 8X டிஜிட்டல் ஜூமிங், 3X லாஸ்லெஸ் ஜூமிங், 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அதேபோல 5 எம்பி செல்பீ கேமராவிலும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. போர்ட்ராய்டு, நைட், எச்டிஆர் போட்டோ போன்ற ஸ்டெபிலைசேஷன் மோட் (Stabilization Mode) கிடைக்கிறது. 35W ஹானர் சூப்பர் சார்ஜ் கிடைக்கிறது.
இந்த சார்ஜிங்குடன் 5200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.24 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொடுக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டி உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை பேக் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








