நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Honor 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 18) ஹானர் எக்ஸ்7சி 5ஜி (Honor X7c 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் அமேசான் தளத்தில் இந்த புதிய ஹானர் எக்ஸ்7சி 5ஜி அறிமுகமாகும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை வெளியாகி உள்ளது.
ஹானர் எக்ஸ்7சி 5ஜி அம்சங்கள் (Honor X7c 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (octa-core Snapdragon 4 Gen 2 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஹானர் போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Andorid 15) இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (fingerprint sensor), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
அதுவும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் ஐபி64 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டை (IP64 water and dust resistance rating) கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் போன். அதேபோல் இந்த போனின் எடை 196 கிராம் ஆகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
மேலும் 5200mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்7சி 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
ஃபரஸ்ட் கிரீன் (Forest Green), மிட்நைட் பிளாக் (Midnight Black), மூன்லைட் வைட் (Moonlight White) நிறங்களில் இந்த புதிய போனை வாங்கலாம். அதேபோல் ப்ளூடூத் 5, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த புதிய ஹானர் போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








