அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.14,999 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 35W சார்ஜிங்.. 256GB ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஹானர் எக்ஸ்7சி 5ஜி (HONOR X7c 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. பட்ஜெட் விலையில் 256 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 5200mAh பேட்டரி, 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. 5 ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ட் கொண்ட இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஹானர் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலைக்கு கிடைக்கின்றன. இதில், புதிய மாடலாக ஹானர் எக்ஸ்7சி 5ஜி வெளியானது. ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியான இந்த போனின் விற்பனை இப்போது அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கி இருக்கிறது. முதலில் விலை விவரங்களை பார்த்துவிட்டு, பிறகு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இந்த விலையில் அறிமுக சலுகை ஏதும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், ரூ.14,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை கொடுத்துள்ளது.
அதேபோல 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையையும் கொடுத்து இருக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டில் பேட்டரி, சிப்செட் மட்டுமல்லாமல் குவாலிட்டியிலும் கவனம் செலுத்தி இருக்கிறது. ஏனென்றால், 5 ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. அதேபோல 3 நிமிட வாட்டர் வாஷ் டெஸ்டிங்குடன் IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
ஆகவே, டியூரபிலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டும் பின்னடைவாக இருக்கிறது. ஏனென்றால், இப்போது மார்கெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பட்ஜெட் மாடல்களிலேயே கிடைக்கிறது. இந்த நேரத்தில் ஒரு வருட பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதை தவிர மற்ற பீச்சர்களில் ஒன்றும் குறையில்லை. பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது. டிசைனும் அப்படித்தான் பட்ஜெட்டிலும் வீகன் லெதர் பேனல் கொண்ட பாரஸ்ட் கிரீன் (Forest Green) கலர் கிடைக்கிறது. அதேபோல மூன்லைட் ஒயிட் (Moonlight White) கலரிலும் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் எக்ஸ்7சி 5ஜி அம்சங்கள் (HONOR X7c 5G Specifications): மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 6.8 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்7சி 5ஜி போனில் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5200mAh பேட்டரி வருகிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், டூயல் ரியர் கேமரா மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.
சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி சார்ஜிங், டூயல் நானோ சிம் சிலாட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுவொரு 5ஜி மாடலாக இருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கிடைக்கிறது. வை-பை 802, ப்ளூடூத் 5.0 போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








