விஸ்வரூப பட்ஜெட்.. வெறும் ரூ.19,972 போதும்.. 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 256GB மெமரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக வெறும் ரூ.19,972 விலையில் 108 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 256 ஜிபி மெமரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட ஹானர் எக்ஸ்7பி (Honor X7b) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஹானர் எக்ஸ்7பி அம்சங்கள் (Honor X7b Specifications): இந்த ஹானர் போனில் 6.8 இன்ச் (1080 x 2412 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபிளாட் பன்ஞ் ஹோல் கட்அவுட் (Flat Punch Hole Cutout) எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1080p ரெசொலூஷன் வருகிறது.

இந்த போனில் மேஜிக் ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 680 SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக பிரம்மாண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் (Triple Rear System) வருகிறது.
ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் எச்டிஆர் (HDR), பனோரமா (Panorama) போன்ற மோட்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராவை போலவே இந்த ஹானர் மாடலின் பேட்டரி சிஸ்டமும் ஸ்மார்ட்போன் பிரியர்களை மிரள வைக்கிறது. அந்த வகையில், 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது.
அதேபோல ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ஹானர் எக்ஸ்7பி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதோடு மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது.
இந்த ஹானர் எக்ஸ்7பி போனில் டிடிஎஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 3.5 மிமீ இயர்போன் ஜாக் (Earphone Jack) வருகிறது. இதுவொரு 4ஜி வேரியண்ட் என்பதால் டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனில் டீப் பிளாக் (Deep Black), ,ஷிம்மரிங் சில்வர் (Shimmering Silver) மற்றும் எமரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த ஹானர் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,972ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.
இதன் குளோபல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. அதன்பின்பு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த போன் 108 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பட்ஜெட் விலையில் கொண்டிருப்பதால், இந்திய சந்தைக்கு வந்தால் மிகவும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








