Home
Mobile

இவ்ளோ அழகா.. 6000mAh பேட்டரி.. 108MP கேமரா.. 256GB மெமரி.. புதிய ஹானர் போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் சமீபத்தில் தான் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம். இந்நிலையில் மீண்டும் ஒரு அழகான ஹானர் போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் எக்ஸ்7பி 5ஜி (Honor X7b 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த போன் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது ஹானர் எக்ஸ்7பி 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இவ்ளோ அழகா.. புதிய ஹானர் போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஹானர் எக்ஸ்7பி 5ஜி அம்சங்கள் (Honor X7b 5G specifications): 6.8-இன்ச் ஐபிஎஸ் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே (IPS LCD FHD+ display) வசதியுடன் இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2412 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimensity 6020 SoC chipset) வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்7பி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் மேஜிக்ஓஎஸ் 7.2 ( MagicOS 7.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்7பி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இவ்ளோ அழகா.. புதிய ஹானர் போன் அறிமுகம்.. எந்த மாடல்?

108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்7பி 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த போனில் 8எம்பி செல்பி கேமரா உள்ளது.இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6000எம்ஏஎச் பேட்டரி (6000mAh battery) வசதியுடன் ஹானர் எக்ஸ்7பி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (35W fast charging)வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஹானர் எக்ஸ்7பி 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ளோ அழகா.. புதிய ஹானர் போன் அறிமுகம்.. எந்த மாடல்?

5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), டூயல் பேண்ட் வைஃபை (dual-band Wi-Fi), புளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.

மிட்நைட் பிளாக் (Midnight Black), கிரிஸ்டல் சில்வர் (Crystal Silver) மற்றும் எமரால்டு கிரீன் ( Emerald Green) நிறங்களில் இந்த அசத்தலான போன் வெளிவந்துள்ளது. ஆனால் ஹானர் எக்ஸ்7பி 5ஜி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை ஹானர் நிறுவனம். இருந்தபோதிலும் ரூ.18,000-க்குள் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor X7b 5G silently announced with MediaTek Dimensity 6020 SoC: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X