தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.16,392 பட்ஜெட்ல 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
108 எம்பி மெயின் கேமரா, 6000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, 35W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், கேமராவுக்காக பிரத்யேக பிசிகல் பட்டனுடன் ஹானர் எக்ஸ்70ஐ (Honor X70i) போன் வெளியாகி இருக்கிறது. இதுபோக ஏஐ இமேஜ் என்லார்ஜ்மெண்ட், ஏஐ ஸ்னாப் போன்ற கேமரா பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்70ஐ போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் எக்ஸ்70ஐ அம்சங்கள் (Honor X70i Specifications): இந்த ஹானர் போனில் 6.7 இன்ச் (1080 x 2412 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் டிசிஐ பி3 வைடு கலர் காமட் சப்போர்ட் வருகிறது.

108 எம்பி மெயின் கேமரா மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த கேமராவுக்கான பிசிகல் சைடு பட்டன் கிடைக்கிறது. இந்த பட்டன் மூலம் கேமரா ஆன் (Camera on), சைடு டூ ஜூம் (Side to Zoom), ஏஐ ஸ்மார்ட் விஷன் (AI Smart Vision) மற்றும் ஒன்-ஹேண்ட் கன்ட்ரோல் கிடைக்கிறது.
இதுபோக IP65 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், மழையில் கேமராவை பயன்படுத்தும்போது டிஸ்பிளேவை தொடாமலேயே பிசிகல் பட்டன் மூலம் ஆப்ரேட் செய்யலாம். இருப்பினும், இந்த டிஸ்பிளேவுக்கு குளோவ் டச் கன்ட்ரோல் (Glove Touch Control) கிடைக்கிறது. கேமராவுக்காக பிரத்யேக ஏஐ பீச்சர்களையும் இந்த போன் கொடுக்கிறது.
ஆகவே, ஏஐ ஸ்னாப் (AI Snap), ஏஐ இமேஜ் என்லார்ஜ்மெண்ட் (AI Image Enlargement), ஏஐ ஸ்டைல் (AI Style) மற்றும் டைனாமிக் போட்டோஸ் (Dynamic Photos) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஹானர் எக்ஸ்70ஐ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன.
மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core Dimensity 7025 Ultra) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்காக 6000mAh கேபாசிட்டி கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்கு 35W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஹானர் சவுண்ட் (HONOR Sound) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) சப்போர்ட் கிடைக்கிறது. மாக்னோலியா பர்பிள் (Magnolia Purple), வெல்வெட் பிளாக் (Velvet Black), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இந்த ஹானர் எக்ஸ்70ஐ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வெர்ஷனின் விலை ரூ.16,392ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வெர்ஷனின் விலை ரூ.19,907ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வெர்ஷனின் விலை ரூ.22,251ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. அங்கு முதலில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








