Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 8300mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 512GB மெமரி.. OIS கேமரா.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டிலும் அதிக கேபாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும் 8300mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் எக்ஸ்70 (HONOR X70) வெளியாக இருக்கிறது. இந்த போனின் டிஸ்பிளே, சிப்செட், கலர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ஹானர் எக்ஸ்70 போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? எப்போது வெளியாகும்? முதலில் எந்த மார்கெட்டில் விற்பனைக்கு வரும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஹானர் எக்ஸ்60 (HONOR X60) மற்றும் ஹானர் எக்ஸ்60 ப்ரோ (HONOR X60 Pro) ஆகிய மாடல்கள் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகின. இதனால், ஹானர் எக்ஸ்70 சீரிஸ் (Honor X70 Series) ஓரிரு மாதங்களில் சீன மார்கெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கேற்ப ஹானர் எக்ஸ்70 போனின் பீச்சர்கள் கசிந்து ஒட்டுமொத்த கவனத்தை பெற்றுள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 8300mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஏனென்றால், இந்த போனில் 8300mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இதுவரையில் வெளியான ஹானர் ஸ்மார்ட்போன்களிலேயே அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வெய்போவில் (Weibo) இருக்கும் சைனீஸ் டிப்ஸ்டர் பாண்டா இஸ் பால்டு (Panda is Bald) மூலம் இந்த பீச்சர்கள் கசிந்துள்ளன. என்னென்ன பீச்சர்கள் கசிந்துள்ளன?

ஹானர் எக்ஸ்70 அம்சங்கள் (HONOR X70 Specifications): இந்த ஹானர் போனில் 8300mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இதன் 512 ஜிபி மெமரி மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி கொடுத்தும் 7.7 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல 193 கிராம் மட்டுமே எடை கொடுக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் வெர்ஷனில் இது மாறுபடுகிறது.

ஆகவே, வயர்லெஸ் சார்ஜிங் வெர்ஷனில் 7.9 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை வர இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்70 போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.79 இன்ச் (2640 x 1200 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. ஒயிட் (White), ப்ளூ (Blue), பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பொறுத்தவரையில், மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வர இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. டைப்-சி ஆடியோ, டைப்-சி சார்ஜிங் போர்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். அடுத்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்60 போனின் பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஹானர் எக்ஸ்60 ப்ரோ மாடலே ரூ.23,605 பட்ஜெட்டிலேயே வெளியானது. 5800mAh பேட்டரி, ஓஐஎஸ் கேமரா, 35W சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுத்தது. ஆகவே, இந்த போனை கம்மியான பட்ஜெட்டிலேயே எதிர்பார்க்கலாம்.

Image: HONOR X60

Best Mobiles in India

English summary
HONOR X70 Specifications Leaked With 8300mAh Battery 80W Charging Check Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X